Posts

Showing posts from April, 2004

பிரபலங்கள் சந்திப்பு - my version

மூக்கரின் கட்டுரையை ஒட்டி பிரபலங்கள் சந்திப்பு எல்லாம் பின்னால் தான் நடந்தது. முதலில் பிரபலங்களைப் பார்த்தது. 1981. அந்த ஆண்டில் தான் முதலில் சென்னையில் காலடி எடுத்து வைத்தது. ஜாகை மந்தைவெளி, சடையப்ப முதலி தெரு. எங்கள் வீடு அந்தத் தெருவின் முதல் வீடு. அதனால், சைடில் இருக்கும் பலகணி, பிரபலமான ராமகிருஷ்ணா மடம் சாலையைப் பார்த்த வண்ணம் இருக்கும். நாலு கட்டிடம் தாண்டினால் கபாலி டால்க்கீஸ் ( முதலில் அதை அப்படித்தான் உச்சரித்தேன்). அந்த வீட்டுக்கு வந்து குடியேறிய சில தினங்களிலேயே நடிகர் சுருளிராஜனைப் பலகணி வழியாக பார்த்தேன். படுத்துக் கொண்டிருந்தார். அவரை தூக்கிக் கொண்டு இடுகாட்டுக்குப் போய்க் கொண்ட்டிருந்தார்கள். ( பல வருடங்கள் கழித்து அவருடைய மகன் சண்முகவேல், என்னுடன் உயர்நிலைப் பள்ளியில் ஒன்றாகப் படித்தார்). அவர்தான், மன்னிக்கவும் அதுதான் நான் பார்த்த முதல் பிரபலம். பள்ளிக்குச் சேர்ந்த கொஞ்ச நாளில், வேறொரு ஊரில் இருந்து வந்த நான், எதிலும் ஒட்டாமல் ஒரு பயங்கலந்த பார்வையுடனே இருப்பேன். ஆங்கிலம் வேறு புரியாது. (மூன்றாவது வகுப்பில் என்னத்தை புரியும்.) ஒரு நாள் வகுப்பில் திடீர் என்று...

அம்மா உந்தன் கைவளையாய்......

வாணிஜெயராம் தான் எனக்கு ரொம்ப பிடித்த பாடகி என்று ஒருமுறை நண்பர் ஒருவரிடம் சொன்ன போது அவர் முறைத்தார். இருக்காதா பின்னே? சாதனா சர்கம், சித்ரா, சுஜாதா வில் இருந்து சமீபத்திய ஸ்ரீலேகா பார்த்தசாரதி, மதுமிதா. சுசித்ரா என்று கலக்கிக் கொண்டிருக்க, இப்பப் போய் வாணிஜெயராம் என்கிறீரா என்பதாகத்தான் இருந்தது அந்த முறைப்பு. அதுக்கு என்ன செய்ய முடியும். நானே நானா யாரோதானா வில் இருந்து, மன்னன் மயங்கும் மல்லிகை வரை, அபூர்வராகங்களில் இருந்து சங்கராபரணம் வரை கட்டிப் போட்ட குரலாயிற்றே? இந்தப் பாட்டை யாராவது கேட்டிருக்கிறீர்களோ? அன்பு மேகமே .. கொஞ்சம் ஓடிவா! அப்புறம் இந்தப் பாட்டு... மல்லிகை முல்லை பூப்பந்தல்... சரி அதெல்லாம் விடுங்க.. அதல்லாம் உடுங்க... அம்மா உந்தன் கைவளையாய் ஆகமாட்டேனா பாட்டு? சின்னபிள்ளையாக இருந்த போது, சென்னைத் தொலைக்காட்சியில் பார்த்த ஒரு படத்தில் வந்த அந்தப் பாட்டு அப்போதே மனதில் நின்று போனது. தேசிய விருது பெற்ற இயக்குனர் கே.எஸ். சேதுமாதவனின் படம் அது என்றோ, அந்தப் பாட்டை எழுதியவர் பாரதிதாசன் என்றோ அப்போது தெரியாது. பின்னால்தான் தெரிந்து கொண்டேன். நேற்றோ அல்லது அ...

வெயிலோ வெயில்

Image
( புகைப்படத்துக்கும் கட்டுரைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ) நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது சூரியன் எ····ப்ப்ப்ப்ப் எம்ம்ம்ம்ம்ம் என்று ஒரு அம்மணி என் ரேடியோ பொட்டியில் குந்திக் கொண்டு , அரைமணிக்கொருதரம் விடாமல் அலறிக் கொண்டிருக்க, படையப்பா ரஜினிகாந்த் போல சொக்காயை கழட்டிப் போட்டு விட்டு உட்கார்ந்திருந்தேன். இதற்காக போலீஸ்காரர்கள் நியூசென்ஸ் கேசில் எல்லாம் பிடிக்க முடியாது. நான் உட்காந்திருந்தது நாலுசக்கர சீருந்துக்குள். ஸ்பென்சர் வளாகத்தில் இருந்து மௌண்ட் ரோடு தர்கா இஞ்சு இஞ்சாக நகர்ந்து வர கிட்டதட்ட அரை மணிநேரம். நடுவில் ஒரு வெள்ளை யானை, i mean, ஒயிட் அம்பாசடர், நகரமாட்டேன் என்று சண்டி செய்ய, டிரா·பிக் போலீஸ்கார் கூட நாலு ஆளைக் கூட்டிக் கொண்டு, வந்து தள்ள, அதற்குள் எதிர்பக்கத்தில் இருந்து நாலைந்து வண்டிகள் குறுக்கே புகுந்து விட, க்ஷண நேரத்தில் பர்·பக்ட் டிரா·பிக் ஜாம். வெள்ளிக்கிழமையாக இருந்தால், இடப்பக்கம் இருக்கும் தர்காவுக்கு நாசர் வருவார். வேடிக்கை பார்க்கலாம். சனி ஞாயிறாக இருந்தால் வண்டியை ஓரங்கட்டிவிட்டு, எதுத்த பக்கம் இருக்கும் புகாரியில் வான்கோழி பிரியாணி சாப்ப...

E-zine & Databases

மடல் இதழ்களும் தரவு தளங்களும் ஈ-சைன் ( Ezine ) என்று சொல்லப்படும் பல இதழ்களை நான் இணையத்தில் பார்க்கிறேன். அவை உண்மையில் இணையத்தளங்கள் மட்டும்தான். ஈசைன்கள் அல்ல. ஒரு இதழை வடிவமைத்து, பொருத்தமான இணைப்புகள் கொடுத்து அவற்றை வாசகர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைப்பதுதான் மடல் இதழ். இதனை சரியாகப் புரிந்து கொண்டு இருக்கிறார் என்ற மகிழ்ச்சிதான், வெங்கடேஷ் உருவாக்க முயன்று இருக்கும் மடல் இதழைப் பார்த்த உடனே வந்தது. இந்த மடல் இதழுக்கான வரவேற்பு, அந்த இதழின் உள்ளடக்கத்தைப் பொறுத்த விஷயம். தொடர்ந்து நடத்தும் ஆர்வமும், இதழின் வடிவமைப்பும், மற்ற இதழ்களைப் போலவே பல பகுதிகளையும் உள்ளடக்கி இருப்பதும், வெகுஜனப்பத்திரிகைகளில் சோதனை செய்து பார்க்க அனுமதி கிடைக்காத சில விஷயங்களை, சோதித்துப் பார்ப்பதும், வாசகர்களுடனான ஊடாட்டமும், இந்த முயற்சி வெற்றி பெறுவதை உறுதி செய்யும். வெங்கடேஷ் பத்திரிக்கை உலகுடன் பரிச்சயம் உள்ளவரென்பதாலும், நல்ல எழுத்தாளர் என்பதாலும், இந்த மடல் இதழை நடத்துவதில் அவருக்கு சிரமம் ஒன்றும் இருக்காது. அவருக்கு என் வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள் சொன்ன கையோடு, அவர் த...

எழுத்தும் இலக்கியமும்

பிரபு தன் வலைப்பதிவில் போகிற போக்கில் சொன்ன ஒரு விஷயம் என் சிந்தனையைத் தூண்டிவிட்டது. வர்த்தகம் பற்றி எழுதும் ஆட்கள் மிகக் குறைவு என்று அவர் சொன்னது, எனக்குள் மிக நீண்ட காலமாக இருக்கும் ஒரு எண்ணத்தை அசை போட வைத்துவிட்டது. ஆங்கிலத்தில் கட்டுரை இலக்கியம் என்று என்று எடுத்துக் கொண்டால், யார் யார் எந்த எந்த துறைகளில் இருக்கிறார்களோ அவர்கள் அந்த அந்த துறைகள் பற்றி கட்டுரைகள் எழுதுகிறார்கள். நிபுணர்களும் வல்லுனர்களும் எழுதும் ஏதாவது ஒரு இயல் சார்ந்த கட்டுரைகளை நாம் நாளிதழ்களிலும், வார இதழ்களிலும், இணையத்திலும் வாசித்துக் கொண்டு தான் இருக்கிறோம். ஆனால், இங்கே பார்த்தால் , பொறியாளர்களும், வங்கி அலுவலர்களும், ஆசிரியர்களும், பத்திரிக்கைத் துறையாளர்களும், விஞ்ஞானிகளும், ஆடிட்டர்களும் கவிதைகளும் கதைகளும் நாவல்கள் மட்டும் தான் எழுதுகிறார்கள். கொஞ்சம் விலகி எழுதினால் கூட அது அரசியலாவோ ( கருணாநிதியா சோனியாவா?) சினிமாவாகவோதான் ( அகிரா குரோசோவா, வைரமுத்து, பாய்ஸ் இன்ன பிற) இருக்கிறது. வார இதழ்களில் வரும் கட்டுரைகளை ( அவை என்ன மேட்டராக இருந்தாலும் ) எழுதுவது பத்திரிக்கையாளர்கள் தான்.எல்லாவற்றி...