படித்ததில் பிடித்தவை
......இஷ்ட்டாப்ப்ப்ப்..
ரொம்ப ஓவரா சீன் போடறேன் போலிருக்கு...
ஆரம்பம் இங்க
மேட்டர் என்னன்னா, கொஞ்ச நாள் முன்னாடி வரை, பத்மப்ரியான்னு ஒரு அம்மிணி வலைப்பதிவுல, கதை எழுதிட்டு இருந்தாங்க.. தொடர்கதை எல்லாம் படிச்சு ரொம்ப நாளாச்சு.. இருந்தாலும், நினைவுப்பெட்டகம் னு ஒரு தொடர்கதையை விடாமப் படிச்சு வந்தேன். இப்ப திடீர்னு காணோம். சில சமயம் நான் எப்பவோ எழுதினதைப் படிச்சுப் பார்த்தாலே, அட, இத்தனை கேவலமா எழுதீருக்கோமான்னு கடுப்பா இருக்கும். சில பேர் எழுதினதை அடிக்கடி படிச்சுப் பாக்கணும்னு தோணும். தொடர்ந்து எழுதினா நல்லா இருக்குமேன்னு சில பதிவுகளைப் பார்த்தா தோணும்.. இந்த மூணாவது கேடகரியிலே விழறவங்க ரொம்ப கம்மி. அப்படி எழுதிட்டு இருந்தாங்க... திடீர்னு ஆளைக் காணோம்.. மதி சுட்டியிருந்த கொலைவாணி, அடச்சே, கலைவாணி எழுதற பதிவுகளை சமீபத்துல படிச்சதுலேந்து... , தெலுங்குப் பையன் ஒர்த்தனுக்கு தமிழ் கத்துக்குடுத்த கதையும் நல்ல கூத்து, மெட்ராஸ் பொண்ணு.. நல்லா நின்னு விளையாடுது... தமிழ்பதிவு ஒண்ணும் ஆரம்பிச்சுருக்காங்க போல பார்ப்போம்..
அதன்னெமோ, தமிழ்ல கூட்டு வலைப்பதிவுங்கற concept அத்தனை பிரபலமாகவில்லை.. இன்னிக்குப் புதுசா பத்ரி, கிரிக்கெட் பத்தின கூட்டு வலைப்பதிவு ஒண்ணை ஆரம்பிச்சுருக்கார்.. கொஞ்ச நேரம் முன்னாடி வரைக்கும் ஸ்கோர் மூணு ( அதாவது உறுப்பினர் எண்ணிக்கை ).. இது எப்படிப் போகுதுன்னு பார்க்கணும்.. இந்த மாதிரி niche வலைப்பதிவுக்கு, டார்கெட் ஆடியன்ஸ் யாருன்னு மொதல்லயே முடிவு செஞ்சுடறது நல்லது... புள்ளிவிவரங்களை கையிலே வெச்சுகிட்டு சுத்தறவங்களுக்கு மட்டுமா இல்லாட்டி, பொஜ்ஜனதுக்காங்கறது முக்கியம்... ஏன்னு கேட்டீங்கன்னா, நான் தொடர்ந்து படிக்கிற ஆங்கில வலைப்பதிவு ஒண்ணு இருக்கு..சுமார் ஏழுட்டு பேர் சேர்ந்து நடத்தறது.. பொருளாதாரம் தொடர்பானது.. இருங்க இருங்க ஓடாதீங்க...நடைமுறையிலே நம்மோட வாழ்க்கையை, பொருளாதாரம் எந்த அளவுல தாக்கம் ஏற்படுத்துதுங்கற மாதிரியான கட்டுரைகள், சுட்டிகள் நிறையக் கிடைக்கும்... அதுல அமித் வர்மா போன வாரம் எழுதிய மேட்டர்லேந்து ஒரு பகுதி
இதை இல்லாட்டி, இதை படிச்சுப் பாருங்களேன்.. கூட்டு வலைப்பதிவாளர்களுக்குள்ள இருக்கிற சினர்ஜி ரொம்ப முக்கியமானது... தமிழ்ல அதுமாதிரி ( பொருளாதாரம்னு மட்டுமில்லை, எந்த துறையாக இருந்தாலும்..) சாத்தியம்னு நினைக்கிறவங்க கைய தூக்குங்க..Consider this experiment: you are a punter, and you get a letter from me sayingthat I have the ability to forecast the result of all cricket matches, and ifyou pay me Rs. 10,000, I shall tell you what will happen in the next game so that you can make a killing — perhaps in crores — by betting on it. I invite you to pay me Rs 10,000 for the results of the next game. I promise you that I shall return the money if my prediction turns out to be incorrect. We work out an online mechanism by which you can cancel the payment right after the game if you wish to.
I get it right. I make the same offer regarding the next game.You pay me Rs 10,000 more, and this time make a modest bet with your bookie on the result I predict. I get it right again. You pay me my fee for the third game as well, and bet an even bigger amount with the bookie. I get it right again. You make a killing. I up my fee to Rs 1 lakh per game. You accept, having already made far more than that.
So are you a schmuck for having done all this?
ரொம்ப நாளா தேன்துளி பத்மாவைத் தேடி, இன்னிக்குத்தான் இங்க கண்டு பிடிச்சேன்..ஏன் தொடர்ந்து வலைப்பதியறதில்லைங்கறதுக்கு ஒரு காரணம் சொல்லி இருந்தாங்க... நடுவில ரெண்டு வாரம், வலைப்பதிவுகள் பக்கம் வராம இருந்ததால, எனக்கு context புரியலை... இருந்தாலும், பாசாங்கில்லாம , மேல்பூச்சு இல்லாம நேர்மையாக எழுதறவங்க, கொறைச்சலாக இருக்கிற சூழ்நிலையிலே , அவங்க சொன்னது வருத்தமா இருந்தது... மேசைல உக்காந்து கூகிள் செய்து, கண்டு பிடிக்கிற விஷயங்களை விடவும், அவங்க எழுதின நேரடியாக அனுபவங்கள் ரொம்ப அழுத்தமாக இருந்தது..நாளைக்கே மீண்டும் வந்து புதுசா ஒரு பதிவைப் போடுவாங்கன்னு நம்புவோம்..
நகைச்சுவையாக எழுதறவங்க ரொம்ப கம்மியாயிட்டாங்க.. ஏதோதோ வழியாப் போய் சட்டுன்னு இவங்க மாட்டினாங்க.. இவங்க ஒரு வடக்கத்திப் பொண்ணுங்கறது என்னுடைய அனுமானம். பொண்ணு பாக்க வந்த விஷயத்தை எழுதியிருக்காங்க.. hilarious ன்னுவாங்களே, அந்த கேடகரி..வயிறு வலிக்கச் சிரிக்கலாம்..தமிழ்ல இந்த அளவுக்கு எழுதக் கூடியவ்ர் ஒர்த்தர் கீறார். ஆனா, எழுதவே மாட்டார்..கேட்டா, வேலை, ரொம்ப பிசி ன்னுவார்.. சஞ்சீத், சந்தோஷ், சசின்னு நெறையப் பேர் நல்லா எழுதறாங்க... குறிப்பாக, சசிகுமார்.. வலைப்பதியும் போது, அது தொடர்பான விஷயங்களை தோண்டி எடுத்து, தகவல் சேகரித்து எழுதறதுங்கறதை எத்தனை பேர் செய்யறாங்கன்னு தெரியலை.. அய்யோ... எதுக்கு வம்பு, நான் செய்யறதில்லை. ஆனால், சசிகுமார் தருகிற புள்ளி விவரங்களும், சொல்ற விதமும், ஆச்சர்யமும் சந்தோஷத்தையும் தருது... சின்னப் பசங்கதான் இப்படின்னா, வலையிலே ஊறி கொட்டை போட்ட ஈரோடு செல்வராஜும், சமயத்துல பேஜார் பண்றார்... இன்னிக்கு செஞ்ச மாதிரி...
சமீபத்துல துவங்கிய பதிவுகளிலே குறிப்பிட்டுச் சொல்லணும்னா, மதுரை காமராசர் பல்கலைக் கழக, இதழியல் பிரிவு துவங்கியிருக்கிற வலைப்பதிவுதான்...துறை மாணவர்களின் பயிற்சி இதழாக அது இருக்கும்னு டாக்டர். ஆர். சாந்தா சொறார்.. இந்தியாவிலேயே முதல் முறையா இது போல நடக்குதுன்னு நினைக்கிறேன்..
டிஜே
மரம்
காசி ஆறுமுகம்
Comments
//பாசாங்கில்லாம , மேல்பூச்சு இல்லாம நேர்மையாக எழுதறவங்க, கொறைச்சலாக இருக்கிற சூழ்நிலையிலே , அவங்க சொன்னது வருத்தமா இருந்தது... மேசைல உக்காந்து கூகிள் செய்து, கண்டு பிடிக்கிற விஷயங்களை விடவும், அவங்க எழுதின நேரடியாக அனுபவங்கள் ரொம்ப அழுத்தமாக இருந்தது..நாளைக்கே மீண்டும் வந்து புதுசா ஒரு பதிவைப் போடுவாங்கன்னு நம்புவோம்..//
பிரகாஷ், உங்கள் பதிவினூடாகச் சென்று இப்போதுதான் இந்த விடயம் அறிந்தேன். நீங்கள் குறிப்பிட்டமாதிரி பாசங்கில்லாத அவரது எழுத்துநடையும், பிறரை அவர்களின் கருத்துக்கள்/நம்பிக்கைகளுடன் புரிந்துகொள்ளும் மனப்பான்மையும் பத்மாவில் எனக்குப் பிடித்திருந்தது.
....
என்ன நடந்தது என்று சரியாகத் தெரியாவிட்டாலும், மீண்டும் புத்துணர்ச்சியோடு வந்து எழுதுவார் என்று நானும் நம்பிக்கை கொள்கின்றேன்.
ப்ரகாஷ்ஜி,
கொஞ்ச நாளா ஆளையே காணோமேன்னு யோசிச்சுக்கிட்டு இருந்தேன். இதான் மேட்டரா? ஒங்க பதிவு தயவுல இம்புட்டு நாளா படிக்காம இருந்த சில வலைப்பதிவுகள் பத்தி தெரிஞ்சது. நன்றி.
அடிக்கடி வலைப்பதிய வாங்க.
நானும் அதைப்படிச்சுட்டு இப்படித்தான் நெனெச்சேன். வரட்டும்.
நீங்கள் எழுதவில்லையென்று யாரோ ஒத்தகுறை வைத்து கதறி அழுதது போல எழுதி இருக்கிறீர்கள். நினைப்பு பொழப்பை கெடுக்கும் என்பார்கள்!!!
அடியில் டீஜே, மரம், காசி ஆறுமுகம் போன்றவர்கள் பதிவினை இணைப்பாக இட்டு இருக்கிறீர்கள். புரியவில்லை. மூவரும் எதுனா உங்களுக்கு பாக்கி கொடுக்கனுமா?
('குப்பை' வழியா முன்னாடியே தெரியும்னாலும், இங்க எதாவது வருமான்னு பாத்துப் பாத்து....)
வாழ்த்துகள்!
பரி : இங்கயே எழுதலாம்னுதான் நினைச்சேன், ஆனா அன்புதான் எடுத்துப் போட்டுட்டாரே, எதுக்கு நா வேற ரம்பம் போடணும்னுதான் விட்டுட்டேன் :-)
:-)