casting couch & yellow journalism
படத்தயாரிப்பாளர் ஒருவர், சான்ஸ் கேட்டு வரும் நடிகையை கொஞ்சம் " அட்ஜஸ்ட்" செய்தால் , வாய்ப்புத் தருகிறேன் என்று சொன்னால் அது casting couch. திரையுலகில் இது ஒரு ஓப்பன் ஸீக்ரட் என்று பொதுவாகச் சொல்லுவார்கள். இதை இந்தியா டீவி வெட்ட வெளிச்சமாக ஆக்கியிருக்கின்றது
தெஹல்கா போட்டு வைத்த பாதையில், புதிதாகத் துவக்கப்பட்ட ரஜத் ஷர்மாவின் இந்தியா டிவியும் வெற்றி நடை போடுகிறது.
இந்தியா டிவியில், "Most Wanted" என்ற நிகழ்ச்சி ரொம்பப் பிரபலம். சமூகத்தில் பிரபலமாக இருப்பவர்களின் முகத்திரையைக் கிழிப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம். அதற்காக குற்றம் நிகழ்கிற வரைக்கும் காத்துக் கொண்டிருக்காமல், அத்தொலைக்காட்சியின் நிருபர்கள், குற்றம் நிகழ்வதற்கு தோதுவான களம் அமைத்துக் கொடுத்து, ஆசாமி வலையில் மாட்டுகின்ற நேரத்தில், கையும் களவுமாகப் பிடிப்பார்கள். அது ஒளிப்படமாகவும் எடுக்கப்பட்டு, தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும்.
இது போலவே ஆயுத பேரம் செய்கிறவர் பாவனையில் தெஹல்கா, அம்பலப்படுத்திய ஊழல் நினைவில் இருக்கலாம்.
சமீபத்தில் இந்த வலையில் மாட்டியவர், இந்தி நடிகர், ஷக்தி கபூர். ஒரு பெண் நிருபர், சான்ஸ் கேட்கிற மாதிரி, ஷக்தி கபூரிடம் செல்ல, அவர், அந்தப் பெண்ணை படுக்கக் கூப்பிட்டு இருக்கிறார். இது தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்த விவகாரம் பற்றி பல்வேறு விதமான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. பத்திரிக்கையாளர் செய்தது தவறு என்று ஒரு சாராரும், ஷக்தி கபூரை திரையுலகில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் கண்டனக் குரல்களும் வந்து கொண்டிருக்கின்றன. ( அவர் ஏற்கனவே சான்ஸ் இல்லாமல் சுற்றிக் கொண்டிருக்கிறார் என்பது வேறு விஷயம்)
செய்தி ஊடகங்கள், இது போல செயல்படுவது முறையா என்பது முக்கியக் கேள்வி. ஷக்தி கபூர் செய்தது பச்சை அயோக்கியத்தனம் என்றாலும், பரபரபரப்புக்காக, திட்டமிட்டு , இது போன்ற நாடகங்களை அரங்கேற்றுவது சரியா என்பதுதான் கேள்வி.
ஒரு மாதத்துக்கு முன்பு, கரீனா கபூரின் முத்த விவகாரத்தை அம்பலப் படுத்திய மிட்டே பத்திரிக்கை, செய்தியையும், ஒளிப்பதிவுத் துண்டையும் வெளியிட்ட சில நாட்களில், அதற்காக மன்னிப்புக் கேட்டது. ஆனால், அதற்குள், மிட்டே பத்திரிக்கை சம்பாதித்த மைலேஜ் எவ்வளவு?
சர்க்குலேஷன் எண்ணிக்கையும் டிஆர்பி ரேட்டிங் செய்யும் மாயங்கள் இவை

Comments
Yes, Tehelka exposed the arms deal, but do you think it curbed the kickbacks or whether people are refusing and exposing even an RTO clerk for getting bribes?
These kind of actions have become purely sensational.