ஒரு புது அனுபவம்

ந்த மாத திசைகளுக்காக பேட்டி ஒன்று எடுக்க வேண்டும் என்று பா.ராகவன் சொன்ன போது, 'அதுக்கென்ன செய்தால் போச்சு' என்று சொல்லி விவரங்கள் கேட்டுக் கொண்டு, தொலைபேசியை கீழே வைத்த பின்புதான், சொரேர் ( இதை உபயோகிப்பதற்கு மன்னிக்கவும் ) என்றது.

இதுக்கு முன்பு நான் பேட்டி எல்லாம் எடுத்ததில்லையே? எப்படிப் போகவேண்டும். எப்படி நேரம் வாங்க வேண்டும் , என்ன என்ன கேள்விகள் எல்லாம் கேட்க வேண்டும். சொல்வதை ஒலிப்பதிவு செய்து கொள்ளவேண்டுமா அல்லது எழுதிக் கொள்ள வேண்டுமா, சுருக்கெழுத்து தெரியவேண்டுமா? போகிற வீட்டில் நாய் இருக்குமா , கட்டிப் போட்டு இருப்பார்களா என்று ஏகப் பட்ட சந்தேகம் வந்து, மீண்டும் தொலைபேசி செய்து, விளக்கம் கேட்டுக் கொண்டேன். குறித்த நேரத்துக்குப் போனேன்.

நான் பேட்டி எடுத்த எழுத்தாளர் ஆர்விக்கு வயது எண்பதுக்கும் மேலே. பொறுமையாக, நிதானமாக சென்ற பேட்டியில் நிகழ்ந்த சமாசாரங்கள் எல்லாம் சுவாரசியமற்றவை. பேட்டி முழுதும் கேள்விகள், பதில்கள், கேள்விகள், பதில்கள் என்ற ரீதியில் சென்றது.

என்னால் மட்டும் தான், உடைக்க (de-cipher) முடியும் என்கிற மாதிரியான குறிப்புக்களை வைத்துக் கொண்டு, மறந்து போனால் பிரச்சனையாகிவிடுமே என்று அவசர அவசர்மாக பேட்டியைத் தொகுத்து, திசைகளுக்கும் அனுப்பியாகிவிட்டது. கரண் தப்பார் செய்கிற விஷயத்தை நாமும் செய்திருக்கிறோம் என்று கொஞ்ச நேரத்துக்கு ஏற்பட்ட மிதப்பு, அடுத்த நாள் வெங்கடேஷ் உள்ளிட்ட நண்பர்களை, உட்லாண்ட்ஸ் டிரைவ்.இன் ஓட்டலில் சந்திக்கும் வரை மட்டும் தான் நீடித்தது.

இப்பேட்டி குறித்து வெங்கடேஷிடம் பேசிக் கொண்டிருந்த போதுதான், அவர் தந்த குட்டி லெக்சரில் தான், இன்னும் எப்படி எல்லாம் கேள்விகள் கேட்டிருக்க வேண்டும் என்றும், எப்படி நோண்ட வேண்டும் என்றும், அதை எப்படி எழுத வேண்டும் என்று புரிந்தது. இரா.முருகன் மெல்லிசான குரலிலும், பத்ரி ஹைபிட்சில் சொன்ன அபிப்ராயங்களும், கவனத்தில் கொள்ள வேண்டியவை. பேட்டி எடுப்பவர் அதிகம் பேசாமல், எதிர்பக்கம் இருப்பவரை அதிகம் பேச வைக்க வேண்டும், உள்ளதை உள்ளபடியே, ( காரம் , நிறம், குணம் , மணம் எதையும் கூட்டவும் குறைக்கவும் செய்யாமல்) எழுத வேண்டும் என்பதும் புரிந்தது.

அதே இதழில் வந்த பா.ராகவனின் பேட்டியைப் படித்ததும் இன்னும் சில விஷயங்கள் புரிந்தது.

குழந்தைக்கு பல் முளைத்தால், நன்றாக ஊறும் . பார்த்ததை எல்லாம் கடித்து வைக்கும். அது போல எனக்கும் விரல் ஊறுகின்றது. சென்னையிலேயே இருக்கின்ற யாராவது விஐபியை, நேரிலே பார்த்து , பேட்டி எடுத்து என் வலைப்பதிவில் , 'வலைபரப்பு' செய்யலாம் என்று நினைக்கிறேன்

யாரைச் செய்யலாம்?

--O--

ந்தியன் எக்ஸ்பிரஸில் ஒரு சுவாரஸ்யமான கேள்வி பதிலைப் பார்த்தேன். வீரப்ப சம்ஹாரம் செய்த காவல் துறை அதிகாரி, விஜயகுமார் பெங்களூருக்கு சென்ற போது, பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார். சந்திப்பின் பேட்டியின் இறுதியில், ஒரு பத்திரிக்கையாளர் கேட்ட கேள்வியும் , அதற்கான விஜயகுமார் அவர்களின் பதிலும் கீழே:

"Did you (STF) trim veerappan's moustache?"

" Please Don't ask such questions to me. I feel very small and very bad when you ask such questions. I don't have scissors to cut his moustache and I have better things to do. I am sorry. This question should not be asked to the Chief of STF."

[ Courtesy , Indian Express Sunday Edition, 31'st October 2004]

--O--

Comments

comments transferred from haloscan

Unrelated comment:அதென்னங்க 'செந்தமிழ் பீட்டர்'? Pari | Homepage | 11.01.04 - 4:47 pm | #

பேட்டி எடுப்பவர் அதிகம் பேசாமல், எதிர்பக்கம் இருப்பவரை அதிகம் பேச வைக்க வேண்டும்>> I thought this is very very basic Pari | Homepage | 11.01.04 - 4:52 pm | #

//அதென்னங்க 'செந்தமிழ் பீட்டர்'? //அது சும்மா உளூளுவாக்கட்டிக்கி prakash | Email | Homepage | 11.02.04 - 3:26 am | #

// I thought this is very very basic//fundas தெரியாம உள்ள இறங்கினதுலேதாங்களே சிக்கலே . பாத்துட்டே இருங்க, ஒர்த்தர் வந்து வெல் செட் அப்படின்னுவார் prakash | Email | Homepage | 11.02.04 - 3:28 am | #

Prakash,you can try interview with your mother or father as first VIP. You prepare the questions as if you are interviewing a 3rd person and then do it formally and then write it as you have learnt. See the result. You would have learnt something totaly different. (not necessary that it should be published.)Mahesh | 11.02.04 - 3:28 am | #

நல்லவேளை, விஜயகுமாரின் பதிலை இண்டியன் எக்ஸ்பிரஸ் தமிழாக்கி தினமணியில் போடவில்லை!J. Rajni Ramki | Email | Homepage | 11.02.04 - 6:11 am | #

ப்ரகாஷ் வீட்டுக் குழந்தைலேருந்து பயிற்சியை ஆரம்பிங்க. அவ்ளோதான் பட்டைய கிளப்பிடலாம். எந்த ஏற்பாடும் இல்லாம, எங்க ஆரம்பிச்சு எங்க முடியும்னே தெரியாம.. ஆனா நிறைய கறJsri | Email | 11.02.04 - 10:21 pm | #

..கறக்க முடியும். நமக்கும் மூளை சுறுப்பா வேலை செய்யணும் அப்ப- ஐ மீன் அவங்க வேகத்துக்கு. சொல்ல முடியாது, ரொம்ப நோண்டினா, நம்பளப்(உங்களப் பத்தின மாற்றுக் கருத்துகள் எல்īJsri | Email | 11.02.04 - 10:25 pm | #

..மாற்றுக் கருத்துகள் எல்லாம் கூட வெளில வரும். எடுத்துப் போட்டீங்கன்னா படிச்சுட்டு சந்தோஷமாப் போயிடுவேன். ஏதோ எனக்குத் தெரிஞ்சதை சொல்லிட்டேன்பா!Jsri | Email | 11.02.04 - 10:26 pm | #

மஹேஷ்: அப்பா அம்மாவை பேட்டி எடுக்கலாம். ஆனால், போட முடியாது. ஏன்னாக்க, என் வண்டவாளம் எல்லாம் வெளியே வந்துடும் prakash | Email | Homepage | 11.02.04 - 10:58 pm | #

ஜெ: எங்க வீட்ல குழந்தையே இல்லையே? வேணும்னா, பக்கத்து வீட்டு குட்டியை எடுக்கலாம். என்ன, ஒரு கேட்பரீஸ் சாக்லெட் லஞ்சம் கேட்கும் , டிரை பண்றேன்prakash | Email | Homepage | 11.02.04 - 10:59 pm | #

பக்கத்து வீட்டு குட்டி? குழந்தைன்னு தெளிவா சொல்லுங்க ப்ரகாஷ்; இல்லை உங்க வீட்லயே குழந்தைக்கு ஏற்பாடு பண்ணுங்க. என்னவோ போங்க. நீங்க எப்ப பயிற்சி எடுத்து, நான் பெரிய்&#Jsri | Email | 11.02.04 - 11:05 pm | #

நான் பெரிய்ய ஆளாகி.. நீங்க என்னை பேட்டி எடுத்து.. ஹூம்! முதல்ல இந்த கமெண்ட் பொட்டிய பெருசாக்குங்க.Jsri | Email | 11.02.04 - 11:06 pm | #

நீங்கள் உங்களையே பேட்டியெடுத்துப் பாருங்கள். இதில் விஷயம் தலைகீழாக இருக்கும். பதில்கள்தான் முதலில் வரும், பதில்களுக்கேற்ற கேள்விகளைத் தயார்செய்ய முயலலாம்! உதார&Montresor | Homepage | 11.03.04 - 11:38 am | #

சுய பேட்டிதான் கேள்விகள் தயாரித்துப் பழக ஒரு சுவாரஸ்யமான வழியென்பது என் அபிப்ராயம். முந்தைய comment கத்திரிக்கப்பட்டுவிட்டது.Montresor | Homepage | 11.03.04 - 11:40 am | #
This comment has been removed by a blog administrator.

Popular posts from this blog

இன்குலாப் பகளாபாத், தெலுங்கு பேசினா ஹைதராபாத்

Mani Ratnam's Guru - Review

வரைவின் மகளிர் from பாண்டவபுரம்