Posts

Showing posts from November, 2006

Sivappathigaram - Review

உஷார்! கதை தெரிந்து விடும். படம் பார்க்க நினைக்கிறவர்கள் படிக்க வேண்டாம். ரமணா, அன்னியன் வரிசையில் வன்முறை மூலமாக நாட்டைத் திருத்த முயலும் மற்றொரு திரைப்படம். ஒரு கல்லூரி நடத்தும் கருத்துக்கணிப்பில் பாதிக்கப்பட்ட இடைத் தேர்தல் வேட்பாளர் சண்முகராஜன், மாணவர்கள் மீது அவிழ்த்து விடும் வன்முறையில், பலர் இறந்து விடுகிறார்கள். பழிவாங்குவதற்காகவும், தேர்தல் என்கிற அமைப்பை சரி செய்வதற்காகவும், நாயகன் விஷால், தன் ஆசிரியர் ரகுவரனின் துணையுடன் , அடுத்து வரும் பொதுத்தேர்தல் வேட்பாளர்கள், அனைவரையும் போட்டுத் தள்ளுகிறார். அதனால், தேர்தலில் யாரும் நிற்க முன்வராமல், ஒரு குழப்ப நிலை நீடிக்கிறது. தேர்தலும் தள்ளிவைக்கப் பட, ஒரு சிபிஐ ஆப்பீசர் ( உபேந்திர லிமாயே ), வந்து, சினிமா வழக்கப்படி, மூன்று காட்சிகளுக்குள் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து விடுகிறார். மதுரை அழகர் திருவிழாவில் கலந்து கொள்ள வரும் உள்துறை அமைச்சர் ராஜன் பி தேவை போட்டுத் தள்ளும் உச்சகட்ட காட்சியில், ஹீரோ, கேமராவுக்கு முன் விஜயகாந்த் ஸ்டைலில் நீளமாக தேர்தல் பற்றிய கருத்துக்களை பேசுவதோடு படம் முடிகிறது. நடுவிலே ரகுவரனின் மகள் மம்தா மோகன்தாஸுடன...

9 weird things about prakash

பிரேமலதாவுக்காக ...., பாலாஜியைத் தொடர்ந்து.... இந்தப் பதிவை எழுதுவது, பிரகாஷின் மனசாட்சி உணவு : தமிழர்களின் பாரம்பரிய உணவு இட்லி . இவன் வீட்டிலும் அப்படித்தான். ' தினமும் இட்லிதானா? " என்று சலித்துக் கொண்டே சாப்பிடுவான். இரண்டு நாள் தொடர்ந்து இட்லி இல்லை என்றால், " ஏன் இட்லி செய்யறதுக்கு என்ன? " என்று கோபித்துக் கொண்டு, ஓட்டலுக்குப் போய் இட்லி சாப்பிட்டு விட்டு, 'ச்சே.. வீட்ல செய்யற மாதிரியே இல்லை" என்று மீண்டும் சலித்துக் கொள்வான். முருகன் இட்லி கடைக்குப் போய், தோசை சாப்பிடுவதையும், அண்ணா நகர் 'சுக்சாகருக்கு' ( அக்மார்க் வட இந்திய உணவகம்) போய் அடை அவியல் ஆர்டர் கொடுப்பதையும், சரவண பவனில், மெனு கார்டில் எங்கேயோ தேடிப் பிடித்து ஸ்வீட் கார்ன் ஸூப் வித் அவுட் க்ரீம் ஆர்டர் செய்து விட்டு, டேபிளில் தாளம் போடுவதைப் பார்த்து விட்டு, நண்பர்கள், அவனை, ருத்ரனிடமோ அல்லது பீட்டர் ஃபெர்ணாண்டஸிடமோ( நகரத்தின் பிரபல மனநல மருத்துவர்கள் ) நைசாகத் தள்ளிக் கொண்டு போக முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். பிடி கொடுக்க மாட்டேன் என்கிறான். இசை : திரை இசை பிடிக்கும். ஆனால் க...