Happy Independence Day

மத்தியப் பிரதேச மாநிலத்தின் முக்கிய நகரமான போபாலில் ஒரு கல்வி நிலையம் இருக்கிறது. Manju Sanskar Kendra என்ற அந்தக் கல்விநிலையத்தின் நோக்கம், 'உருப்படியான' மனைவிகளை உருவாக்குவது. கடந்த இருபத்து இரண்டு ஆண்டுகளாக இயங்கி வரும் இக்கல்வி நிலையத்தில், கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு , திருமணத்துக்கு 'ரெடியாக' இருக்கும் பெண்களுக்கு என்று மூன்று மாதப் course நடத்தப் படுகிறது. இதற்குக் கல்விக் கட்டணம் என்று எதுவும் இல்லை. வகுப்புகள், பொதுவாக காலை ஏழுமணியில் இருந்து பத்து மணி வரை நடக்கும்.

இந்த பாடதிட்டத்தில் சொல்லித் தரப்படும் சிறப்பான விஷயங்கள்..


1. திருமணமாகி, புகுந்த வீட்டில் எப்படி பல் துலக்குவது எப்படி, சமைப்பது எப்படி, மற்றும் உண்பது எப்படி என்று சொல்லித் தருதல்.

2. கணவனுடன் உறவு வைத்துக் கொள்ளச் சரியான நேரம், நடு நிசியில் இருந்து அதிகாலை மூன்று மணி வரை மட்டுமே. மூன்றில் இருந்து காலை ஆறுமணி வரை, பூசை புனஸ்காரங்கள் செய்தல்.

3. புகுந்த வீட்டில் கூட்டுக் குடும்பமாக இருக்கும் பட்சத்தில், நினைத்த நேரத்தில் கணவனுடன் 'சந்தோஷமாக' இருக்க முடியாது என்பதால், உணர்வுகளை அடக்கிக் கொள்வது எப்படி என்று சொல்லித் தருதல்

4. புகுந்த வீட்டில் என்ன என்ன மாதிரியான உடைகளை அணியவேண்டும் என்று சொல்லித் தருதல்.

5. மனைவி வேலை செய்து சம்பாதிக்கலாம். ஆனால், குடும்பச் சூழ்நிலை ஒத்துவந்தால் தான் அவள் வேலைக்குப் போகலாம். குடும்பத்துக்குத்தான் முன்னுரிமை.

6. மாமியார் எத்தனை மோசமானவராக இருந்தாலும், மருமகள், அவருக்கு அடங்கி நடந்து, எப்படி அவரை அன்பால் ஜெயிக்கலாம் என்பதற்கான வழி முறைகள்

7. திருமணம் என்பது ஒரு தியாகம். எத்தனை கஷ்டம் வந்தாலும் ஓரிரு வருடங்கள் கஷ்டப்பட்டு பொறுமையாக இருந்தால், நிலைமை மாறும் என்ற உபதேசம்

8. கணவனே கண் கண்ட தெய்வம், " Our tradition gives the husband the status of a God – Pati Parmeshwar. He may not be Parmeshwar, but he is you provider."


இந்த கல்வி நிலையம், இது வரை சுமார் ரெண்டாயிரத்துச் பேர், இந்த வகுப்புகளில் கலந்து கொண்டு, ஐடியல் மனைவி என்று சான்றிதழ் பெற்றிருக்கிறார்கள்.

Related Link

-------------------------

பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா!
பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா!
தண்மை இன்பம்நற் புண்ணியஞ் சேர்ந்தன
தாயின் பெயரும் சதியென்ற நாமமும். - சுப்பிரமணிய பாரதியார்


-------------------------

Happy Independence Day

Comments

வாழ்க சுதந்திரம்!! இங்கே ட்ரஸ்ட் புர சிக்னலில் இந்திய கொடிகள் விற்பனைக்கு. ஃசுயுடோ தேச பக்தர்கள், குண்டூசி குத்தி மார்பில் கொடியேறி, சிக்கன் கறி சாப்பிட்டு, நாக்கில் நிரடினால், கொடி நீக்கி, குண்டூசியால் வெளியேற்றி, தெம்பாக தான் இருக்கிறது இந்திய சுதந்திரம்.
//பிரகாஷ்ஜி, எனக்கு இருந்த சந்தேகத்தினை தீர்த்தமைக்கு நன்றி.//

என்ன டிட் ·பார் டாட் ஆ? பாத்துட்டே இருங்க...ஒர் நாளில்லே ஒர் நாள்... வேணாம்... தமிழன் எதையும் சொல்லிட்டு செய்யறதில்லை.... :-) :-) :-)

//கையில் பீர் நிரப்பிய குவளையுடன் ஒரு புகைப்படம் போட்டிருக்கலாம் :) //

btw, உட்லாண்ட்ஸ் டிரைவ்-இன்னில் பியர் அருந்த அனுமதிப்பதில்லை
முன்பே தெரிந்திருந்தால் பயனாக இருந்திருக்கும்.
SnackDragon said…
பிரகாஷ், பிரச்சினையை பேசியிருப்பதற்காக/சுட்டியிருப்பதற்காக நன்றி.
'இப்படி ஒரு அமைப்பு இருக்குனு நம்பவே முடிலைன்னு' எழுத நினைச்சேன். அப்புறம் இதேன்ன ஜுஜுபி, இதுக்கு பாட்டி அமைப்பேல்லாம் சில வீட்டுக்குள்ளேயே இருக்கும் பொழுதுன்னு நானே என் naivety க்கு பதிலும் சொல்லிக்கிட்டேன்.
நாராயண், விசிதா, கார்த்திக், தேன்துளி பின்னூட்டங்களுக்கு நன்றி

//அப்புறம் இதேன்ன ஜுஜுபி, இதுக்கு பாட்டி அமைப்பேல்லாம் சில வீட்டுக்குள்ளேயே இருக்கும் பொழுதுன்னு//

ரம்யா : ரொம்ப ரொம்ப உண்மை
சு. க்ருபா ஷங்கர் said

இந்த கல்வி நிலையம், இது வரை சுமார் ரெண்டாயிரத்துச் பேர், இந்த வகுப்புகளில் கலந்து கொண்டு, ஐடியல் மனைவி என்று சான்றிதழ் பெற்றிருக்கிறார்கள்.

"ம்ம்ம், என்ன படிச்சு என்ன ப்ரயோஜனம். வேலை கிடைச்சதும் கற்ற கல்வியை முழுமையா பயன்படுத்திக்கத் தெரியறதில்லை. சில பேர் சர்ட்டிஃபிகேட் மட்டும் வாங்கிடறாங்க. இந்தியக் கல்விமுறை மாற வேண்டும்."

-க்ருபா,
மேல்கைண்ட்
Vaa.Manikandan said…
enna payya!
namakkum solli tharuvaangala?

Popular posts from this blog

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?

9 weird things about prakash

இன்குலாப் பகளாபாத், தெலுங்கு பேசினா ஹைதராபாத்